1. யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக. |
4. ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,
தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். |
6. அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,
அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார். |
7. மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். |
8. எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,
நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர். |
9. நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர். PE |