தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. [QS]யெகோவா ராஜரிகம்செய்கிறார், [QE][QS]மக்கள் தத்தளிப்பார்களாக; [QE][QS]அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், [QE][QS]பூமி அசைவதாக. [QE]
2. [QS]யெகோவா சீயோனில் பெரியவர், [QE][QS]அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர். [QE]
3. [QS]மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; [QE][QS]அது பரிசுத்தமுள்ளது. [QE]
4. [QS]ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, [QE][QS]தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; [QE][QS]நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். [QE]
5. [QS]நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, [QE][QS]அவர் பாதத்தைப் பணியுங்கள்; [QE][QS]அவர் பரிசுத்தமுள்ளவர். [QE]
6. [QS]அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், [QE][QS]அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், [QE][QS]யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; [QE][QS]அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார். [QE]
7. [QS]மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; [QE][QS]அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் [QE][QS]அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். [QE]
8. [QS]எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, [QE][QS]நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; [QE][QS]நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், [QE][QS]அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர். [QE]
9. [QS]நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, [QE][QS]அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; [QE][QS]நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 99 / 150
1 யெகோவா ராஜரிகம்செய்கிறார், மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக. 2 யெகோவா சீயோனில் பெரியவர், அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர். 3 மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது. 4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். 5 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவர் பாதத்தைப் பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். 6 அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார். 7 மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். 8 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர். 9 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 99 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References