1. {பாடல்.} யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QBR] அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; [QBR] அவருடைய வலது கரமும், [QBR] அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது. [QBR]
2. யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, [QBR] தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார். [QBR]
3. அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; [QBR] பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது. [QBR]
4. பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் [QBR] யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள். [QBR]
5. சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள், [QBR] சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள். [QBR]
6. யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் [QBR] எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள். [QBR]
7. கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக. [QBR]
8. யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி, [QBR] மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும். [QBR]
9. அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; [QBR] உலகத்தை நீதியோடும் [QBR] மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். [PE]