1. [QS]யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி, [QE][QS]திரளான தீவுகள் மகிழட்டும். [QE]
2. [QS]மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; [QE][QS]நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். [QE]
3. [QS]நெருப்பு அவருக்கு முன்சென்று, [QE][QS]சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது. [QE]
4. [QS]அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; [QE][QS]பூமி அதைக்கண்டு அதிர்ந்தது. [QE]
5. [QS]யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, [QE][QS]சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது. [QE]
6. [QS]வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; [QE][QS]எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். [QE]
7. [QS]சிலைகளை வணங்கி, [QE][QS]விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; [QE][QS]தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். [QE]
8. [QS]சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, [QE][QS]உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள். [QE]
9. [QS]யெகோவாவே, பூமி அனைத்திற்கும் [QE][QS]நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர். [QE]
10. [QS]யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; [QE][QS]அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, [QE][QS]துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். [QE]
11. [QS]நீதிமானுக்காக வெளிச்சமும், [QE][QS]செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. [QE]
12. [QS]நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, [QE][QS]அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். [QE]