1. [QS]யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, [QE][QS]நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள். [QE]
2. [QS]துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, [QE][QS]பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். [QE]
3. [QS]யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். [QE]
4. [QS]பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; [QE][QS]மலைகளின் உயரங்களும் அவருடையவைகள். [QE]
5. [QS]கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; [QE][QS]காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது. [QE]
6. [QS]நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக [QE][QS]நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள். [QE]
7. [QS]அவர் நம்முடைய தேவன்; [QE][QS]நாம் அவர் மேய்ச்சலின் மக்களும், [QE][QS]அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. [QE]
8. [QS]இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், [QE][QS]வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, [QE][QS]உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள். [QE]
9. [QS]அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து, [QE][QS]என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள். [QE]
10. [QS]நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து, [QE][QS]அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், [QE][QS]என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, [QE]
11. [QS]என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று, [QE][QS]என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன். [QE]