1. [QS]யெகோவா ஆளுகை செய்கிறார், [QE][QS]மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, [QE][QS]அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; [QE][QS]ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. [QE]
2. [QS]உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; [QE][QS]நீர் என்றென்றும் இருக்கிறீர். [QE]
3. [QS]யெகோவாவே, நதிகள் எழும்பின; [QE][QS]நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; [QE][QS]நதிகள் அலைதிரண்டு எழும்பின. [QE]
4. [QS]திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, [QE][QS]கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர். [QE]
5. [QS]உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; [QE][QS]யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக [QE][QS]உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது. [QE]