1. {ஓய்வுநாளின் பாடல். } [QS]யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, [QE][QS]உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும், [QE]
2. [QS]பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், [QE][QS]தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், [QE]
3. [QS]காலையிலே உமது கிருபையையும், [QE][QS]இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும். [QE]
4. [QS]யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், [QE][QS]உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன். [QE]
5. [QS]யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! [QE][QS]உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். [QE]
6. [QS]மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; [QE][QS]மூடன் அதை உணரமாட்டான். [QE]
7. [QS]துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, [QE][QS]அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, [QE][QS]அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். [QE]
8. [QS]யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர். [QE]
9. [QS]யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; [QE][QS]உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள். [QE]
10. [QS]என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; [QE][QS]புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன். [QE]
11. [QS]என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; [QE][QS]எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு [QE][QS]நேரிடுவதை என்னுடைய காது கேட்கும். [QE]
12. [QS]நீதிமான் பனையைப்போல் செழித்து, [QE][QS]லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். [QE]
13. [QS]யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் [QE][QS]எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள். [QE]
14. [QS]யெகோவா உத்தமரென்றும், [QE][QS]என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் [QE][QS]அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி, [QE]
15. [QS]அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, [QE][QS]புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள். [QE]