1. [QS]உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் [QE][QS]சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். [QE]
2. [QS]நான் யெகோவாவை நோக்கி: [QE][QS]நீர் என்னுடைய அடைக்கலம், [QE][QS]என்னுடைய கோட்டை, என் தேவன், [QE][QS]நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். [QE]
3. [QS]அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், [QE][QS]பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். [QE]
4. [QS]அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; [QE][QS]அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; [QE][QS]அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். [QE]
5. [QS]இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், [QE]
6. [QS]இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், [QE][QS]மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய். [QE]
7. [QS]உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், [QE][QS]உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், [QE][QS]அது உன்னை அணுகாது. [QE]
8. [QS]உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய். [QE]
9. [QS]எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை [QE][QS]உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய். [QE]
10. [QS]ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, [QE][QS]வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது. [QE]
11. [QS]உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, [QE][QS]உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். [QE]
12. [QS]உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு [QE][QS]அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். [QE]
13. [QS]சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, [QE][QS]பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். [QE]
14. [QS]அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; [QE][QS]என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் [QE][QS]அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். [QE]
15. [QS]அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், [QE][QS]நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்; [QE][QS]ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து, [QE][QS]அவனைக் கனப்படுத்துவேன். [QE]
16. [QS]நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, [QE][QS]என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். [QE]