1. {தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம். } [QS]ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக [QE][QS]எங்களுக்கு அடைக்கலமானவர். [QE]
2. [QS]மலைகள் தோன்றுமுன்பும், [QE][QS]நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், [QE][QS]நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். [QE]
3. [QS]நீர் மனிதர்களைத் தூளாக்கி, [QE][QS]மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர். [QE]
4. [QS]உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் [QE][QS]நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது. [QE]
5. [QS]அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; [QE][QS]தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; [QE][QS]காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். [QE]
6. [QS]அது காலையிலே முளைத்துப் பூத்து, [QE][QS]மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும். [QE]
7. [PS]நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து [PE][QS]உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம். [QE]
8. [QS]எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், [QE][QS]எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். [QE]
9. [QS]எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; [QE][QS]ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம். [QE]
10. [QS]எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், [QE][QS]பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், [QE][QS]அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; [QE][QS]அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம். [QE]
11. [QS]உமது கோபத்தின் வல்லமையையும், [QE][QS]உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்? [QE]
12. [QS]நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, [QE][QS]எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். [QE]
13. [QS]யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? [QE][QS]உமது அடியார்களுக்காகப் பரிதபியும். [QE]
14. [QS]நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, [QE][QS]காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். [QE]
15. [QS]தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், [QE][QS]நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும். [QE]
16. [QS]உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், [QE][QS]உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. [QE]
17. [QS]எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; [QE][QS]எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; [QE][QS]ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும். [QE]