1. {முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். } [QS]யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; [QE][QS]உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். [QE]
2. [QS]உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; [QE][QS]உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன். [QE]
3. [QS]என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, [QE][QS]உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள். [QE]
4. [QS]நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, [QE][QS]நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர். [QE]
5. [QS]தேசங்களைக் கடிந்துகொண்டு, [QE][QS]துன்மார்க்கர்களை அழித்து, [QE][QS]அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர். [QE]
6. [QS]எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; [QE][QS]அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; [QE][QS]அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது. [QE]
7. [QS]யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; [QE][QS]தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார். [QE]
8. [QS]அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, [QE][QS]எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார். [QE]
9. [QS]சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; [QE][QS]நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். [QE]
10. [QS]யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; [QE][QS]ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள். [QE]
11. [QS]சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, [QE][QS]அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள். [QE]
12. [QS]ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, [QE][QS]அவர்களை நினைக்கிறார்; [QE][QS]எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார். [QE]
13. [QS]மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, [QE][QS]நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, [QE][QS]உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு, [QE]
14. [QS]தேவனே நீர் எனக்கு இரங்கி, [QE][QS]என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். [QE]
15. [QS]தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: [QE][QS]அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. [QE]
16. [QS]யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; [QE][QS]துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) [QE]
17. [QS]துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், [QE][QS]நரகத்திலே தள்ளப்படுவார்கள். [QE]
18. [QS]எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; [QE][QS]ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. [QE]
19. [QS]எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; [QE][QS]தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் [QE]
20. [QS]தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, [QE][QS]அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா). [QE]