1. {எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல். } [QS]யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; [QE][QS]உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன். [QE]
2. [QS]கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்; [QE][QS]உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன். [QE]
3. [QS]என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, [QE][QS]என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி: [QE]
4. [QS]என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, [QE][QS]தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா) [QE]
5. [QS]யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், [QE][QS]பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். [QE]
6. [QS]வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? [QE][QS]பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்? [QE]
7. [QS]தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், [QE][QS]தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர். [QE]
8. [QS]சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, [QE][QS]உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? [QE][QS]உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. [QE]
9. [QS]தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்; [QE][QS]அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர். [QE]
10. [QS]நீர் ராகாபை[* ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9 [BR] 87:4. ல் குறிப்பிடப்பட்ட ராகாப் புராணக் கதைகளிகளின் கடல் பாம்பு ஆகும் ] வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; [QE][QS]உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர். [QE]
11. [QS]வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, [QE][QS]பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் [QE][QS]நீரே அஸ்திபாரப்படுத்தினீர். [QE]
12. [QS]வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; [QE][QS]தாபோரும் [† தாபோர் ஒரு மலை. கலேலியா ஏரியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் உயரம் 555 அடிகளாகும் ] எர்மோனும் [‡ எர்மோன் ஒரு மலையின் பெயர். கலேலியா ஏரியின் வடகிழக்கில் 75 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இதின் உயரம் 8,940 அடிகளாகும் ] உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும். [QE]
13. [QS]உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; [QE][QS]உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; [QE][QS]உம்முடைய வலதுகை உன்னதமானது. [QE]
14. [QS]நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; [QE][QS]கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். [QE]
15. [QS]கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; [QE][QS]யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். [QE]
16. [QS]அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு, [QE][QS]உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். [QE]
17. [QS]நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்; [QE][QS]உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும். [QE]
18. [QS]யெகோவாவால் எங்களுடைய கேடகமும், [QE][QS]இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு. [QE]
19. [QS]அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: [QE][QS]உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து, [QE][QS]மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். [QE]
20. [QS]என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; [QE][QS]என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன். [QE]
21. [QS]என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்; [QE][QS]என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும். [QE]
22. [QS]எதிரி அவனை நெருக்குவதில்லை; [QE][QS]துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை. [QE]
23. [QS]அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி, [QE][QS]அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். [QE]
24. [QS]என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; [QE][QS]என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும். [QE]
25. [QS]அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும், [QE][QS]அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன். [QE]
26. [QS]அவன் என்னை நோக்கி: [QE][QS]நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். [QE]
27. [QS]நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும், [QE][QS]பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன். [QE]
28. [QS]என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; [QE][QS]என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். [QE]
29. [QS]அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், [QE][QS]அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன். [QE]
30. [QS]அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல், [QE][QS]என்னுடைய வேதத்தை விட்டு விலகி; [QE]
31. [QS]என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்; [QE]
32. [QS]அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும், [QE][QS]அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன். [QE]
33. [QS]ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும், [QE][QS]என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன். [QE]
34. [QS]என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும், [QE][QS]என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன். [QE]
35. [QS]ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், [QE][QS]தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன். [QE]
36. [QS]அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; [QE][QS]அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். [QE]
37. [QS]சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், [QE][QS]வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா) [QE]
38. [QS]ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்; [QE][QS]நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர். [QE]
39. [QS]உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, [QE][QS]அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். [QE]
40. [QS]அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, [QE][QS]அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர். [QE]
41. [QS]வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; [QE][QS]தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான். [QE]
42. [QS]அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி, [QE][QS]அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர். [QE]
43. [QS]அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து, [QE][QS]அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர். [QE]
44. [QS]அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, [QE][QS]அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். [QE]
45. [QS]அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி, [QE][QS]அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா) [QE]
46. [QS]எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? [QE][QS]உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? [QE]
47. [QS]என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; [QE][QS]மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன? [QE]
48. [QS]மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்? [QE][QS]தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா) [QE]
49. [QS]ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு [QE][QS]சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே? [QE]
50. [QS]ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், [QE][QS]நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், [QE]
51. [QS]யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், [QE][QS]வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும் [QE][QS]என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும். [QE]
52. [QS]யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும். [QE][QS]ஆமென். ஆமென். [QE]