1. {கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல். } [QS]என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே, [QE][QS]இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். [QE]
2. [QS]என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; [QE][QS]என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். [QE]
3. [QS]என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; [QE][QS]என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. [QE]
4. [QS]நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, [QE][QS]பெலனற்ற மனிதனைப்போல ஆனேன். [QE]
5. [QS]மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; [QE][QS]நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, [QE][QS]உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன். [QE]
6. [QS]என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். [QE]
7. [QS]உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; [QE][QS]உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா) [QE]
8. [QS]எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, [QE][QS]அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; [QE][QS]நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன். [QE]
9. [QS]துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; [QE][QS]யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, [QE][QS]உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன். [QE]
10. [QS]இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? [QE][QS]செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா) [QE]
11. [QS]கல்லறைக்குழியில் உமது கிருபையும், [QE][QS]அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ? [QE]
12. [QS]இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது [QE][QS]நீதியும் அறியப்படுமோ? [QE]
13. [QS]நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QE][QS]காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். [QE]
14. [QS]யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? [QE][QS]ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்? [QE]
15. [QS]சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; [QE][QS]உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, [QE][QS]நான் மனங்கலங்குகிறேன். [QE]
16. [QS]உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; [QE][QS]உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது. [QE]
17. [QS]அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, [QE][QS]ஒன்றாக என்னை வளைந்துகொள்ளுகிறது. [QE]
18. [QS]நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; [QE][QS]எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள். [QE]