தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {கோராகின் மகன்களுடைய பாடல்.} அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது. [QBR]
2. யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட [QBR] சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார். [QBR]
3. தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா) [QBR]
4. என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; [QBR] இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், [QBR] எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; [QBR]
5. சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; [QBR] உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார். [QBR]
6. யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, [QBR] இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா) [QBR]
7. எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று [QBR] பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 87 / 150
சங்கீதம் 87:81
1 கோராகின் மகன்களுடைய பாடல். அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது. 2 யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார். 3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா) 4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; 5 சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார். 6 யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா) 7 எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 87 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References