1. {கோராகின் மகன்களுடைய பாடல். } [QS]அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது. [QE]
2. [QS]யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட [QE][QS]சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார். [QE]
3. [QS]தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா) [QE]
4. [QS]என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; [QE][QS]இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், [QE][QS]எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; [QE]
5. [QS]சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; [QE][QS]உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார். [QE]
6. [QS]யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, [QE][QS]இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா) [QE]
7. [QS]எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று [QE][QS]பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள். [QE]