1. {கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல்.} யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, [QBR] யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். [QBR]
2. உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, [QBR] அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா) [QBR]
3. உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, [QBR] உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர். [QBR]
4. எங்கள் இரட்சிப்பின் தேவனே, [QBR] நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், [QBR] எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும். [QBR]
5. என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? [QBR] தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ? [QBR]
6. உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி [QBR] நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? [QBR]
7. யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, [QBR] உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். [QBR]
8. கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; [QBR] அவர் தம்முடைய மக்களுக்கும் [QBR] தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; [QBR] அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக. [QBR]
9. நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, [QBR] அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. [QBR]
10. கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், [QBR] நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். [QBR]
11. சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், [QBR] நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும். [QBR]
12. யெகோவா நன்மையானதைத் தருவார்; [QBR] நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும். [QBR]
13. நீதி அவருக்கு முன்னாகச் சென்று, [QBR] அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும். [PE]