2. என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது;
என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. |
3. என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே,
உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. |
4. உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா) |
5. உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும்,
தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். |
6. அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்;
மழையும் குளங்களை நிரப்பும். |
8. சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா) |
10. ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது;
துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். |
11. தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்;
யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். |