1. {கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். } [QS]நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி, [QE][QS]யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள். [QE]
2. [QS]தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, [QE][QS]பாட்டு பாடுங்கள். [QE]
3. [QS]மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், [QE][QS]நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள். [QE]
4. [QS]இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், [QE][QS]யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது. [QE]
5. [QS]நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது, [QE][QS]இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார். [QE]
6. [QS]அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்; [QE][QS]அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது. [QE]
7. [QS]நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; [QE][QS]இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; [QE][QS]மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா) [QE]
8. [QS]என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; [QE][QS]இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும். [QE]
9. [QS]உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; [QE][QS]அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம். [QE]
10. [QS]உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே; [QE][QS]உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன். [QE]
11. [QS]என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; [QE][QS]இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. [QE]
12. [QS]ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; [QE][QS]தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள். [QE]
13. [QS]ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து, [QE][QS]இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்! [QE]
14. [QS]நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி, [QE][QS]என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன். [QE]
15. [QS]அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; [QE][QS]அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். [QE]
16. [QS]செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; [QE][QS]கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். [QE]