1. {கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல்.} எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, [QBR] உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! [QBR] உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். [QBR]
2. விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, [QBR] தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர். [QBR]
3. உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், [QBR] நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, [QBR]
4. மனிதனை நீர் நினைக்கிறதற்கும், [QBR] மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். [QBR]
5. நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; [QBR] மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர். [QBR]
6. உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து. [QBR]
7. ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், [QBR]
8. ஆகாயத்துப் பறவைகளையும், [QBR] கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். [QBR]
9. எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, [QBR] உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! [PE]