1. தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து,
உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். |
2. உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும்,
உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். |
3. எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்;
அவர்களை அடக்கம்செய்பவருமில்லை. |
5. எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ?
உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ? |
6. உம்மை அறியாத தேசங்கள் மேலும்,
உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும். |
8. முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்;
உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாக எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம். |
9. எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து,
உமது பெயருக்காக எங்களை விடுவித்து, எங்களுடைய பாவங்களை மன்னியும். |
10. அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்?
உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல் தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும். |
11. கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்;
கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும். |
12. ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை,
ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும். |
13. அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்;
தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம். PE |