1. {எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல். } [QS]நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், [QE][QS]என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், [QE][QS]அவர் எனக்குச் செவிகொடுத்தார். [QE]
2. [QS]என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; [QE][QS]இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; [QE][QS]என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. [QE]
3. [QS]நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; [QE][QS]நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா) [QE]
4. [QS]நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; [QE][QS]நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன். [QE]
5. [QS]ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன். [QE]
6. [QS]இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, [QE][QS]என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; [QE][QS]என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. [QE]
7. [QS]ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? [QE][QS]இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ? [QE]
8. [QS]அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? [QE][QS]வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ? [QE]
9. [QS]தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? [QE][QS]கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா) [QE]
10. [QS]அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; [QE][QS]ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன். [QE]
11. [QS]யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், [QE][QS]உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; [QE]
12. [QS]உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, [QE][QS]உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். [QE]
13. [QS]தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; [QE][QS]நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? [QE]
14. [QS]அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; [QE][QS]மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர். [QE]
15. [QS]யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, [QE][QS]உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா) [QE]
16. [QS]தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, [QE][QS]தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; [QE][QS]ஆழங்களும் கலங்கினது. [QE]
17. [QS]மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; [QE][QS]ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; [QE][QS]உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. [QE]
18. [QS]உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; [QE][QS]மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. [QE]
19. [QS]உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; [QE][QS]உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. [QE]
20. [QS]மோசே ஆரோன் என்பவர்களின் கையால், [QE][QS]உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர். [QE]