1. {அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். } [QS]யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; [QE][QS]இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. [QE]
2. [QS]சாலேமில் அவருடைய கூடாரமும், [QE][QS]சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. [QE]
3. [QS]அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், [QE][QS]கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) [QE]
4. [QS]மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். [QE]
5. [QS]தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, [QE][QS]உறங்கி அசந்தார்கள்; [QE][QS]வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. [QE]
6. [QS]யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் [QE][QS]இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. [QE]
7. [QS]நீர், நீரே, பயங்கரமானவர்; [QE][QS]உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? [QE]
8. [QS]நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், [QE][QS]தேவனே நீர் எழுந்தருளினபோது, [QE]
9. [QS]வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; [QE][QS]பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) [QE]
10. [QS]மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; [QE][QS]மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். [QE]
11. [QS]பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; [QE][QS]அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். [QE]
12. [QS]பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; [QE][QS]பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர். [QE]