1. {அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். } [QS]உம்மைத் துதிக்கிறோம், [QE][QS]தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; [QE][QS]உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது. [QE]
2. [QS]நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன். [QE]
3. [QS]பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; [QE][QS]அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) [QE]
4. [QS]வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; [QE][QS]துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன். [QE]
5. [QS]உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; [QE][QS]உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். [QE]
6. [QS]கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. [QE]
7. [QS]தேவனே நியாயாதிபதி; [QE][QS]ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். [QE]
8. [QS]கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, [QE][QS]அதிலிருந்து ஊற்றுகிறார்; [QE][QS]பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். [QE]
9. [QS]நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, [QE][QS]யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன். [QE]
10. [QS]துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; [QE][QS]நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். [QE]