தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆசாப் பாடின மஸ்கீல் என்னும் பாடல். } [QS]தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? [QE][QS]உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? [QE]
2. [QS]நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், [QE][QS]நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், [QE][QS]நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும். [QE]
3. [QS]நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்; [QE][QS]பரிசுத்தஸ்தலத்திலே எதிரி அனைத்தையும் கெடுத்துப்போட்டான். [QE]
4. [QS]உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, [QE][QS]தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். [QE]
5. [QS]கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான். [QE]
6. [QS]இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும், [QE][QS]சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள். [QE]
7. [QS]உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, [QE][QS]உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து, [QE][QS]அசுத்தப்படுத்தினார்கள். [QE]
8. [QS]அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, [QE][QS]தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். [QE]
9. [QS]எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; [QE][QS]தீர்க்கதரிசியும் இல்லை; [QE][QS]இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. [QE]
10. [QS]தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? [QE][QS]பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? [QE]
11. [QS]உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; [QE][QS]அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். [QE]
12. [QS]பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற [QE][QS]தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. [QE]
13. [QS]தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, [QE][QS]தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின்[* இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1 ] தலைகளை உடைத்தீர். [QE]
14. [QS]தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, [QE][QS]அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர். [QE]
15. [QS]ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; [QE][QS]மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர். [QE]
16. [QS]பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; [QE][QS]தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். [QE]
17. [QS]பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; [QE][QS]கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர். [QE]
18. [QS]யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், [QE][QS]மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். [QE]
19. [QS]உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; [QE][QS]உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும். [QE]
20. [QS]உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; [QE][QS]பூமியின் இருளான இடங்கள் [QE][QS]கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. [QE]
21. [QS]துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்; [QE][QS]சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும். [QE]
22. [QS]தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; [QE][QS]மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். [QE]
23. [QS]உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; [QE][QS]உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 74 / 150
ஆசாப் பாடின மஸ்கீல் என்னும் பாடல். 1 தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? 2 நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும். 3 நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்; பரிசுத்தஸ்தலத்திலே எதிரி அனைத்தையும் கெடுத்துப்போட்டான். 4 உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். 5 கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான். 6 இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும், சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள். 7 உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து, அசுத்தப்படுத்தினார்கள். 8 அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். 9 எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. 10 தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? 11 உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். 12 பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. 13 தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின்* இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1 தலைகளை உடைத்தீர். 14 தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர். 15 ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர். 16 பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். 17 பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர். 18 யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். 19 உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும். 20 உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. 21 துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும். 22 தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். 23 உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 74 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References