1. தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்?
உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? |
2. நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும்,
நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும். |
3. நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்;
பரிசுத்தஸ்தலத்திலே எதிரி அனைத்தையும் கெடுத்துப்போட்டான். |
4. உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து,
தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். |
6. இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும்,
சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள். |
7. உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி,
உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து, அசுத்தப்படுத்தினார்கள். |
8. அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி,
தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். |
9. எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்;
தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. |
11. உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்;
அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். |
13. தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து,
தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் * இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1 தலைகளை உடைத்தீர். |
18. யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும்,
மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். |
19. உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்;
உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும். |
20. உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்;
பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. |
21. துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்;
சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும். |
22. தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்;
மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். |
23. உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்;
உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது. PE |