1. {ஆசாபின் பாடல். } [QS]சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு [QE][QS]தேவன் நல்லவராகவே இருக்கிறார். [QE]
2. [QS]ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும், [QE][QS]என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது. [QE]
3. [QS]துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, [QE][QS]வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். [QE]
4. [QS]மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை; [QE][QS]அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது. [QE]
5. [QS]மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; [QE][QS]மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள். [QE]
6. [QS]ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், [QE][QS]கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். [QE]
7. [QS]அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; [QE][QS]அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது. [QE]
8. [QS]அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; [QE][QS]பெருமையாகப் பேசுகிறார்கள். [QE]
9. [QS]தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; [QE][QS]அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது. [QE]
10. [QS]ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; [QE][QS]தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும். [QE]
11. [QS]தேவனுக்கு அது எப்படித் தெரியும்? [QE][QS]உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? [QE][QS]என்று சொல்லுகிறார்கள். [QE]
12. [QS]இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; [QE][QS]இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, [QE][QS]சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். [QE]
13. [QS]நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, [QE][QS]குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன். [QE]
14. [QS]நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், [QE][QS]காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். [QE]
15. [QS]இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், [QE][QS]இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். [QE]
16. [QS]இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; [QE][QS]நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, [QE]
17. [QS]அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை, [QE][QS]அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது. [QE]
18. [QS]நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, [QE][QS]பாழான இடங்களில் விழச்செய்கிறீர். [QE]
19. [QS]அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! [QE][QS]பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள். [QE]
20. [QS]தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, [QE][QS]நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர். [QE]
21. [QS]இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, [QE][QS]என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன். [QE]
22. [QS]நான் காரியம் அறியாத மூடனானேன்; [QE][QS]உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். [QE]
23. [QS]ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; [QE][QS]என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். [QE]
24. [QS]உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, [QE][QS]முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். [QE]
25. [QS]பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? [QE][QS]பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. [QE]
26. [QS]என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; [QE][QS]தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும் [QE][QS]என்னுடைய பங்குமாக இருக்கிறார். [QE]
27. [QS]இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; [QE][QS]உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர். [QE]
28. [QS]எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; [QE][QS]நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி [QE][QS]கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன். [QE]