தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. [QS]தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், [QE][QS]ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். [QE]
2. [QS]அவர் உம்முடைய மக்களை நீதியோடும், [QE][QS]உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். [QE]
3. [QS]மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், [QE][QS]மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும். [QE]
4. [QS]மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, [QE][QS]ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். [QE]
5. [QS]சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். [QE]
6. [QS]புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். [QE]
7. [QS]அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; [QE][QS]சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். [QE]
8. [QS]ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், [QE][QS]நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். [QE]
9. [QS]வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; [QE][QS]அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள். [QE]
10. [QS]தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; [QE][QS]ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். [QE]
11. [QS]எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; [QE][QS]எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள். [QE]
12. [QS]கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். [QE]
13. [QS]எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, [QE][QS]எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார். [QE]
14. [QS]அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; [QE][QS]அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும். [QE]
15. [QS]அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; [QE][QS]அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், [QE][QS]எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். [QE]
16. [QS]பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; [QE][QS]அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; [QE][QS]பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள். [QE]
17. [QS]அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; [QE][QS]சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; [QE][QS]மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், [QE][QS]எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள். [QE]
18. [QS]இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; [QE][QS]அவரே அதிசயங்களைச் செய்கிறவர். [QE]
19. [QS]அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; [QE][QS]பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. [QE][QS]ஆமென், ஆமென். [QE]
20. [QS]ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 72 / 150
1 தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். 2 அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். 3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும். 4 மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். 5 சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். 6 புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். 7 அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். 8 ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். 9 வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள். 10 தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். 11 எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள். 12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 13 எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார். 14 அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும். 15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். 16 பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள். 17 அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள். 18 இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர். 19 அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென். 20 ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 72 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References