1. {பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தையினிமித்தம் யெகோவாவை நோக்கி தாவீது பாடிய பாடல்.} என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; [QBR] என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும். [QBR]
2. எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், [QBR] விடுவிக்கிறவன் இல்லாததால், [QBR] அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். [QBR]
3. என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், [QBR] என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், [QBR]
4. என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், [QBR] காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், [QBR]
5. எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, [QBR] என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, [QBR] என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா) [QBR]
6. யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, [QBR] என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, [QBR] எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. [QBR]
7. மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; [QBR] அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். [QBR]
8. யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; [QBR] யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் [QBR] எனக்கு நியாயம்செய்யும். [QBR]
9. துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; [QBR] நீதிமானை நிலைநிறுத்தும்; [QBR] நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், [QBR] சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். [QBR]
10. செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. [QBR]
11. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; [QBR] அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன். [QBR]
12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; [QBR] அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். [QBR]
13. அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; [QBR] தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். [QBR]
14. இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; [QBR] தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். [QBR]
15. குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; [QBR] தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். [QBR]
16. அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், [QBR] அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். [QBR]
17. நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். [QBR] நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன். [PE]