1. {நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, [QE][QS]என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும். [QE]
2. [QS]என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது [QE][QS]பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; [QE][QS]எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். [QE]
3. [QS]நீர் எனக்கு அடைக்கலமும், [QE][QS]எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர். [QE]
4. [QS]நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; [QE][QS]உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா) [QE]
5. [QS]தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; [QE][QS]உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். [QE]
6. [QS]ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; [QE][QS]அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். [QE]
7. [QS]அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; [QE][QS]தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். [QE]
8. [QS]இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, [QE][QS]உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன். [QE]