1. {நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.} தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, [QBR] என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும். [QBR]
2. என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது [QBR] பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; [QBR] எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். [QBR]
3. நீர் எனக்கு அடைக்கலமும், [QBR] எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர். [QBR]
4. நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; [QBR] உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா) [QBR]
5. தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; [QBR] உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். [QBR]
6. ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; [QBR] அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். [QBR]
7. அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; [QBR] தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். [QBR]
8. இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, [QBR] உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன். [PE]