தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், [QBR] உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். [QBR]
2. என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, [QBR] நான் பெலனில்லாமல் போனேன்; [QBR] என்னைக் குணமாக்கும் யெகோவாவே, [QBR] என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. [QBR]
3. என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, [QBR] எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். [QBR]
4. திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; [QBR] உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். [QBR]
5. மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, [QBR] பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? [QBR]
6. என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; [QBR] இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, [QBR] என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். [QBR]
7. துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, [QBR] என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. [QBR]
8. அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; [QBR] யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். [QBR]
9. யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; [QBR] யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். [QBR]
10. என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; [QBR] அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 150
சங்கீதம் 6:55
1 செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். 2 என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் யெகோவாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. 3 என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். 4 திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். 5 மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 6 என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். 7 துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. 8 அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 9 யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 10 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References