1. {இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது. } [QS]என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; [QE][QS]என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். [QE]
2. [QS]அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, [QE][QS]இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும். [QE]
3. [QS]இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; [QE][QS]யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும், [QE][QS]பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள். [QE]
4. [QS]என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், [QE][QS]ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்; [QE][QS]எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும். [QE]
5. [QS]சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, [QE][QS]இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்; [QE][QS]வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா) [QE]
6. [QS]அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். [QE]
7. [QS]இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; [QE][QS]அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, [QE][QS]கேட்கிறவன் யார் என்கிறார்கள். [QE]
8. [QS]ஆனாலும் யெகோவாவே, [QE][QS]நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; [QE][QS]அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர். [QE]
9. [QS]அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; [QE][QS]தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். [QE]
10. [QS]என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; [QE][QS]தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். [QE]
11. [QS]அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; [QE][QS]எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, [QE][QS]அவர்களைத் தாழ்த்திப்போடும். [QE]
12. [QS]அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; [QE][QS]அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் [QE][QS]தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக. [QE]
13. [QS]தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, [QE][QS]அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்; [QE][QS]இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா) [QE]
14. [QS]அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, [QE][QS]ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். [QE]
15. [QS]அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், [QE][QS]முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள். [QE]
16. [QS]நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, [QE][QS]காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; [QE][QS]எனக்கு நெருக்கமுண்டான நாளிலே [QE][QS]நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். [QE]
17. [QS]என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; [QE][QS]தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், [QE][QS]கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார். [QE]