தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.} என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; [QBR] என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். [QBR]
2. அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, [QBR] இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும். [QBR]
3. இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; [QBR] யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும், [QBR] பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள். [QBR]
4. என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், [QBR] ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்; [QBR] எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும். [QBR]
5. சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, [QBR] இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்; [QBR] வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா) [QBR]
6. அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். [QBR]
7. இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; [QBR] அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, [QBR] கேட்கிறவன் யார் என்கிறார்கள். [QBR]
8. ஆனாலும் யெகோவாவே, [QBR] நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; [QBR] அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர். [QBR]
9. அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; [QBR] தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். [QBR]
10. என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; [QBR] தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். [QBR]
11. அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; [QBR] எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, [QBR] அவர்களைத் தாழ்த்திப்போடும். [QBR]
12. அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; [QBR] அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் [QBR] தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக. [QBR]
13. தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, [QBR] அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்; [QBR] இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா) [QBR]
14. அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, [QBR] ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். [QBR]
15. அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், [QBR] முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள். [QBR]
16. நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, [QBR] காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; [QBR] எனக்கு நெருக்கமுண்டான நாளிலே [QBR] நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். [QBR]
17. என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; [QBR] தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், [QBR] கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 59 / 150
சங்கீதம் 59:56
1 இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது. என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். 2 அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும். 3 இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள். 4 என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும். 5 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா) 6 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 7 இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள். 8 ஆனாலும் யெகோவாவே, நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர். 9 அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். 10 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். 11 அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும். 12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக. 13 தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்; இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா) 14 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 15 அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள். 16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். 17 என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 59 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References