1. {தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இசைத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் பாடல். } [QS]மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ? [QE][QS]மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ? [QE]
2. [QS]மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; [QE][QS]பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள். [QE]
3. [QS]துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; [QE][QS]தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள். [QE]
4. [QS]பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. [QE]
5. [QS]பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள். [QE]
6. [QS]தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; [QE][QS]யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும். [QE]
7. [QS]கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; [QE][QS]அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது [QE][QS]அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும். [QE]
8. [QS]கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; [QE][QS]பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக. [QE]
9. [QS]முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே [QE][QS]பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார். [QE]
10. [QS]பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; [QE][QS]அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். [QE]
11. [QS]அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், [QE][QS]மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான். [QE]