1. {தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; [QE][QS]உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; [QE][QS]பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன். [QE]
2. [QS]எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். [QE]
3. [QS]என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, [QE][QS]அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா). [QE][QS]தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். [QE]
4. [QS]என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; [QE][QS]தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; [QE][QS]அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது. [QE]
5. [QS]தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; [QE][QS]உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. [QE]
6. [QS]என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; [QE][QS]என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா) [QE]
7. [QS]என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, [QE][QS]தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன். [QE]
8. [QS]என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; [QE][QS]அதிகாலையில் விழித்துக்கொள்வேன். [QE]
9. [QS]ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; [QE][QS]தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [QE]
10. [QS]உமது கிருபை வானம்வரையும், [QE][QS]உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது. [QE]
11. [QS]தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; [QE][QS]உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. [QE]