1. {தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், [QE][QS]நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். [QE]
2. [QS]என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; [QE][QS]உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். [QE]
3. [QS]நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். [QE]
4. [QS]தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், [QE][QS]நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்? [QE]
5. [QS]எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; [QE][QS]எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது. [QE]
6. [QS]அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; [QE][QS]என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். [QE]
7. [QS]அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? [QE][QS]தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும். [QE]
8. [QS]என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; [QE][QS]என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; [QE][QS]அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? [QE]
9. [QS]நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; [QE][QS]தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். [QE]
10. [QS]தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; [QE][QS]யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். [QE]
11. [QS]தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; [QE][QS]மனிதன் எனக்கு என்ன செய்வான்? [QE]
12. [QS]தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; [QE][QS]உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். [QE]
13. [QS]நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, [QE][QS]நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ? [QE]