1. {தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; [QE][QS]என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும். [QE]
2. [QS]எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; [QE][QS]எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், [QE][QS]துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன். [QE]
3. [QS]அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு, [QE][QS]என்னைப் பகைக்கிறார்கள். [QE]
4. [QS]என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; [QE][QS]மரணபயம் என்மேல் விழுந்தது. [QE]
5. [QS]பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது. [QE]
6. [QS]அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால், [QE][QS]நான் பறந்துபோய் இளைப்பாறுவேன். [QE]
7. [QS]நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா) [QE]
8. [QS]பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன். [QE]
9. [QS]ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்; [QE][QS]கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்; [QE]
10. [QS]அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; [QE][QS]அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது; [QE]
11. [QS]கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; [QE][QS]கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை. [QE]
12. [QS]என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; [QE][QS]எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல, [QE][QS]அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். [QE]
13. [QS]எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன். [QE]
14. [QS]நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து, [QE][QS]கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம். [QE]
15. [QS]மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; [QE][QS]அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; [QE][QS]அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. [QE]
16. [QS]நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; [QE][QS]யெகோவா என்னை காப்பாற்றுவார். [QE]
17. [QS]காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்; [QE][QS]அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார். [QE]
18. [QS]திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; [QE][QS]அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி, [QE][QS]என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். [QE]
19. [QS]ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; [QE][QS]அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா) [QE]
20. [QS]அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத் [QE][QS]தன்னுடைய கையை நீட்டி [QE][QS]தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான். [QE]
21. [QS]அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், [QE][QS]அவனுடைய இருதயமோ யுத்தம்; [QE][QS]அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். [QE][QS]ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். [QE]
22. [QS]யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; [QE][QS]நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார். [QE]
23. [QS]தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; [QE][QS]இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்; [QE][QS]நானோ உம்மை நம்பியிருக்கிறேன். [QE]