1. {தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, [QE][QS]உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும். [QE]
2. [QS]தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும். [QE]
3. [QS]அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; [QE][QS]கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; [QE][QS]தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா) [QE]
4. [QS]இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; [QE][QS]ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார். [QE]
5. [QS]அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், [QE][QS]உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும். [QE]
6. [QS]உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; [QE][QS]யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது. [QE]
7. [QS]அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; [QE][QS]என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது. [QE]