1. {ஆசாபின் பாடல். } [QS]வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, [QE][QS]சூரியன் உதிக்கும்திசை தொடங்கி [QE][QS]அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். [QE]
2. [QS]அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். [QE]
3. [QS]நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; [QE][QS]அவருக்கு முன்பு அக்கினி அழியும்; [QE][QS]அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும். [QE]
4. [QS]அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க [QE][QS]உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். [QE]
5. [QS]பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த [QE][QS]என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். [QE]
6. [QS]வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; [QE][QS]தேவனே நியாயாதிபதி. (சேலா) [QE]
7. [QS]என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, [QE][QS]உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; [QE][QS]நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன். [QE]
8. [QS]உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; [QE][QS]உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. [QE]
9. [QS]உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், [QE][QS]உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. [QE]
10. [QS]எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். [QE]
11. [QS]மலைகளிலுள்ள[* ஆகாயத்தின் ] பறவைகளையெல்லாம் அறிவேன்; [QE][QS]வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். [QE]
12. [QS]நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; [QE][QS]பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. [QE]
13. [QS]நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, [QE][QS]ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? [QE]
14. [QS]நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; [QE]
15. [QS]ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; [QE][QS]நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். [QE]
16. [QS]தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், [QE][QS]என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. [QE]
17. [QS]அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். [QE]
18. [QS]நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; [QE][QS]விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. [QE]
19. [QS]உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், [QE][QS]உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது. [QE]
20. [QS]நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, [QE][QS]உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். [QE]
21. [QS]இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், [QE][QS]உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; [QE][QS]ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, [QE][QS]அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். [QE]
22. [QS]தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; [QE][QS]இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், [QE][QS]ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. [QE]
23. [QS]நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; [QE][QS]தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு [QE][QS]தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். [QE]