1. {கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். } [QS]மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள். [QE]
2. [QS]பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் [QE][QS]ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள். [QE]
3. [QS]என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். [QE]
4. [QS]என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து, [QE][QS]என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். [QE]
5. [QS]என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் [QE][QS]என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில், [QE][QS]நான் பயப்படவேண்டியதென்ன? [QE]
6. [QS]தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, [QE]
7. [QS]ஒருவனாவது, தன்னுடைய சகோதரன்[* தன்னையே ] அழிவைக் காணாமல் [QE][QS]இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, [QE]
8. [QS]அவனை மீட்டுக்கொள்ளவும், [QE][QS]அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே. [QE]
9. [QS]அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; [QE][QS]அது ஒருபோதும் முடியாது. [QE]
10. [QS]ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, [QE][QS]தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். [QE]
11. [QS]தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், [QE][QS]தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் [QE][QS]இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; [QE][QS]அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள். [QE]
12. [QS]ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; [QE][QS]அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். [QE]
13. [QS]இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; [QE][QS]ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா) [QE]
14. [QS]ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; [QE][QS]மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; [QE][QS]செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; [QE][QS]அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். [QE]
15. [QS]ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், [QE][QS]அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) [QE]
16. [QS]ஒருவன் செல்வந்தனாகி, [QE][QS]அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. [QE]
17. [QS]அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; [QE][QS]அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. [QE]
18. [QS]அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: [QE][QS]நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும், [QE]
19. [QS]அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத [QE][QS]தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். [QE]
20. [QS]மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் [QE][QS]அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். [QE]