1. {கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். } [QS]யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், [QE][QS]தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். [QE]
2. [QS]வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, [QE][QS]அதுவே மகாராஜாவின் நகரம். [QE]
3. [QS]அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். [QE]
4. [QS]இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள். [QE]
5. [QS]அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். [QE]
6. [QS]அங்கே நடுக்கங்கொண்டு, [QE][QS]பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள். [QE]
7. [QS]கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். [QE]
8. [QS]நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; [QE][QS]தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா) [QE]
9. [QS]தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, [QE][QS]உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். [QE]
10. [QS]தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல [QE][QS]உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; [QE][QS]உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது. [QE]
11. [QS]உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, [QE][QS]யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக. [QE]
12. [QS]சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள். [QE]
13. [QS]பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, [QE][QS]அதின் சுவரை கவனித்து, [QE][QS]அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள். [QE]
14. [QS]இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; [QE][QS]மரணம்வரை நம்மை நடத்துவார். [QE]