தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.} தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், [QBR] ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். [QBR]
2. ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், [QBR]
3. அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், [QBR] நாம் பயப்படமாட்டோம். (சேலா) [QBR]
4. ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், [QBR] உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும். [QBR]
5. தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; [QBR] அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார். [QBR]
6. தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; [QBR] அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது. [QBR]
7. சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; [QBR] யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா) [QBR]
8. பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள். [QBR]
9. அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; [QBR] வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; [QBR] இரதங்களை [* கேடகங்களை மரத்தினாலும் தோலினாலும் செய்யப்பட்டதாயிருந்தது எரிந்து போக கூடியதாய் இருந்தது. ] நெருப்பினால் சுட்டெரிக்கிறார். [QBR]
10. நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து, [QBR] நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்; [QBR] தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். [QBR]
11. சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார், [QBR] யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா). [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 46 / 150
சங்கீதம் 46:136
1 அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், 3 அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா) 4 ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும். 5 தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார். 6 தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது. 7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா) 8 பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள். 9 அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை * கேடகங்களை மரத்தினாலும் தோலினாலும் செய்யப்பட்டதாயிருந்தது எரிந்து போக கூடியதாய் இருந்தது. நெருப்பினால் சுட்டெரிக்கிறார். 10 நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்; தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். 11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா).
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 46 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References