1. {கோராகு குமாரர்கள் எழுதின சங்கீதம். } [QS]என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; [QE][QS]நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; [QE][QS]என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி. [QE]
2. [QS]எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; [QE][QS]உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; [QE][QS]ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார். [QE]
3. [QS]சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய [QE][QS]உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, [QE]
4. [QS]சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், [QE][QS]உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; [QE][QS]உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும். [QE]
5. [QS]உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், [QE][QS]அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்; [QE][QS]மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும். [QE]
6. [QS]உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது,[* தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது ] [QE][QS]உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது. [QE]
7. [QS]நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; [QE][QS]ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் [QE][QS]உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார். [QE]
8. [QS]தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது, [QE][QS]நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம் [QE][QS]வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது. [QE]
9. [QS]உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு, [QE][QS]இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள். [QE]
10. [QS]மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; [QE][QS]உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. [QE]
11. [QS]அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்; [QE][QS]அவர் உன்னுடைய ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள். [QE]
12. [QS]தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்; [QE][QS]மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள். [QE]
13. [QS]இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; [QE][QS]அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது. [QE]
14. [QS]வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, [QE][QS]ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; [QE][QS]அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் [QE][QS]உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள். [QE]
15. [QS]அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து, [QE][QS]ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள். [QE]
16. [QS]உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்; [QE][QS]அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர். [QE]
17. [QS]உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்; [QE][QS]இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் துதிப்பார்கள். [QE]