1. {கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல். } [QS]மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, [QE][QS]தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. [QE]
2. [QS]என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது; [QE][QS]நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? [QE]
3. [QS]உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், [QE][QS]இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது. [QE]
4. [QS]முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, [QE][QS]கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே; [QE][QS]இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. [QE]
5. [QS]என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? [QE][QS]ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; [QE][QS]அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன். [QE]
6. [QS]என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; [QE][QS]ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். [QE]
7. [QS]உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; [QE][QS]உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. [QE]
8. [QS]ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; [QE][QS]இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; [QE][QS]என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன். [QE]
9. [QS]நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: [QE][QS]ஏன் என்னை மறந்தீர்? [QE][QS]எதிரியால் ஒடுக்கப்பட்டு, [QE][QS]நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். [QE]
10. [QS]உன் தேவன் எங்கே என்று [QE][QS]என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, [QE][QS]என்னை நிந்திப்பது [QE][QS]என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. [QE]
11. [QS]என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? [QE][QS]ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? [QE][QS]தேவனை நோக்கிக் காத்திரு; [QE][QS]என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். [QE]