1. {இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல். } [QS]பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; [QE][QS]தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். [QE]
2. [QS]யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; [QE][QS]பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; [QE][QS]அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை. [QE]
3. [QS]படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்; [QE][QS]அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார். [QE]
4. [QS]யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்; [QE][QS]உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், [QE][QS]என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். [QE]
5. [QS]அவன் எப்பொழுது சாவான், [QE][QS]அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள். [QE]
6. [QS]ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; [QE][QS]அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, [QE][QS]தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். [QE]
7. [QS]என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, [QE][QS]எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து, [QE]
8. [QS]தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; [QE][QS]படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். [QE]
9. [QS]என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், [QE][QS]என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான். [QE]
10. [QS]யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி, [QE][QS]நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும். [QE]
11. [QS]என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், [QE][QS]நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன். [QE]
12. [QS]நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, [QE][QS]என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். [QE]
13. [QS]இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள [QE][QS]எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர். [QE][QS]ஆமென், ஆமென். [QE]