1. {இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல். } [QS]யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; [QE][QS]அவர் என்னிடமாகச் சாய்ந்து, [QE][QS]என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார். [QE]
2. [QS]பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, [QE][QS]என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, [QE][QS]என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி, [QE]
3. [QS]நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; [QE][QS]அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள். [QE]
4. [QS]பெருமைக்காரர்களையும் பொய்யைச்[* தேவர்களையும் ] சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், [QE][QS]யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான். [QE]
5. [QS]என் தேவனாகிய யெகோவாவே, [QE][QS]நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; [QE][QS]ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. [QE][QS]நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். [QE]
6. [QS]பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், [QE][QS]என் காதுகளைத் திறந்தீர்; [QE][QS]சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை. [QE]
7. [QS]அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; [QE]
8. [QS]என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; [QE][QS]உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். [QE]
9. [QS]மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; [QE][QS]என்னுடைய உதடுகளை மூடமாட்டேன், [QE][QS]யெகோவாவே, நீர் அதை அறிவீர். [QE]
10. [QS]உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை; [QE][QS]உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; [QE][QS]உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை. [QE]
11. [QS]யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்; [QE][QS]உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும். [QE]
12. [QS]எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, [QE][QS]என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது, [QE][QS]அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது, [QE][QS]என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது. [QE]
13. [QS]யெகோவாவே, என்னை விடுவித்தருளும்; [QE][QS]யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும். [QE]
14. [QS]என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி, [QE][QS]எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக. [QE]
15. [QS]என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், [QE][QS]தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக. [QE]
16. [QS]உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; [QE][QS]உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று [QE][QS]எப்பொழுதும் சொல்வார்களாக. [QE]
17. [QS]நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், [QE][QS]யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்; [QE][QS]தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; [QE][QS]என் தேவனே, தாமதிக்க வேண்டாம். [QE]