தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல். } [QS]யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; [QE][QS]உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். [QE]
2. [QS]உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; [QE][QS]உமது கை என்னைத் தாங்குகிறது. [QE]
3. [QS]உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; [QE][QS]என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. [QE]
4. [QS]என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, [QE][QS]அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது. [QE]
5. [QS]என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. [QE]
6. [QS]நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். [QE]
7. [QS]என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; [QE][QS]என் உடலில் ஆரோக்கியம் இல்லை. [QE]
8. [QS]நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; [QE][QS]என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். [QE]
9. [QS]ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; [QE][QS]என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை. [QE]
10. [QS]என் உள்ளம் குழம்பி அலைகிறது; [QE][QS]என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது. [QE]
11. [QS]என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; [QE][QS]என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். [QE]
12. [QS]என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; [QE][QS]எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, [QE][QS]நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். [QE]
13. [QS]நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், [QE][QS]ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். [QE]
14. [QS]காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். [QE]
15. [QS]யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; [QE][QS]என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர். [QE]
16. [QS]அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; [QE][QS]என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. [QE]
17. [QS]நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; [QE][QS]என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. [QE]
18. [QS]என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, [QE][QS]என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன். [QE]
19. [QS]என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; [QE][QS]காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். [QE]
20. [QS]நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், [QE][QS]நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். [QE]
21. [QS]யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; [QE][QS]என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம். [QE]
22. [QS]என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, [QE][QS]எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 38 / 150
நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல். 1 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம். 2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; உமது கை என்னைத் தாங்குகிறது. 3 உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது. 5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. 6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். 7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; என் உடலில் ஆரோக்கியம் இல்லை. 8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். 9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை. 10 என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது. 11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். 12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். 13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன். 14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன். 15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர். 16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே. 17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன். 19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். 20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். 21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம். 22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 38 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References