1. {தாவீதின் பாடல். } [QS]பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; [QE][QS]நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. [QE]
2. [QS]அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, [QE][QS]பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். [QE]
3. [QS]யெகோவாவை நம்பி நன்மைசெய்; [QE][QS]தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். [QE]
4. [QS]யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; [QE][QS]அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். [QE]
5. [QS]உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, [QE][QS]அவர்மேல் நம்பிக்கையாயிரு; [QE][QS]அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார். [QE]
6. [QS]உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், [QE][QS]உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார். [QE]
7. [QS]யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; [QE][QS]காரியசித்தியுள்ளவன் மேலும் [QE][QS]தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. [QE]
8. [QS]கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; [QE][QS]பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். [QE]
9. [QS]பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; [QE][QS]யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ [QE][QS]பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். [QE]
10. [QS]இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; [QE][QS]அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. [QE]
11. [QS]சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, [QE][QS]மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். [QE]
12. [QS]துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, [QE][QS]அவன்மேல் பல்லைக் கடிக்கிறான். [QE]
13. [QS]ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; [QE][QS]அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். [QE]
14. [QS]சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், [QE][QS]செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், [QE][QS]துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். [QE]
15. [QS]ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; [QE][QS]அவர்கள் வில்லுகள் முறியும். [QE]
16. [QS]அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, [QE][QS]நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. [QE]
17. [QS]துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; [QE][QS]நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார். [QE]
18. [QS]உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; [QE][QS]அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். [QE]
19. [QS]அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, [QE][QS]பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். [QE]
20. [QS]துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், [QE][QS]யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல [QE][QS]புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள். [QE]
21. [QS]துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; [QE][QS]நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். [QE]
22. [QS]அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; [QE][QS]அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள். [QE]
23. [QS]நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், [QE][QS]அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். [QE]
24. [QS]அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; [QE][QS]யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார். [QE]
25. [QS]நான் இளைஞனாயிருந்தேன், [QE][QS]முதிர்வயதுள்ளவனுமானேன்; [QE][QS]ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், [QE][QS]அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. [QE]
26. [QS]அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், [QE][QS]அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். [QE]
27. [QS]தீமையை விட்டு விலகி, நன்மை செய்; [QE][QS]என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். [QE]
28. [QS]யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; [QE][QS]அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; [QE][QS]அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். [QE]
29. [QS]நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, [QE][QS]என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள். [QE]
30. [QS]நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, [QE][QS]அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். [QE]
31. [QS]அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; [QE][QS]அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. [QE]
32. [QS]துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, [QE][QS]அவனைக் கொல்ல வகைதேடுகிறான். [QE]
33. [QS]யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; [QE][QS]அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. [QE]
34. [QS]நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, [QE][QS]அவருடைய வழியைக் கைக்கொள்; [QE][QS]அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; [QE][QS]துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். [QE]
35. [QS]கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் [QE][QS]அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். [QE]
36. [QS]ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், [QE][QS]அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், [QE][QS]அவன் காணப்படவில்லை. [QE]
37. [QS]நீ உத்தமனை நோக்கி, [QE][QS]செம்மையானவனைப் பார்த்திரு; [QE][QS]அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். [QE]
38. [QS]அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; [QE][QS]அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு. [QE]
39. [QS]நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; [QE][QS]இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். [QE]
40. [QS]யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, [QE][QS]அவர்களை விடுவிப்பார்; [QE][QS]அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், [QE][QS]அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார். [QE]