தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். } [QS]துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; [QE][QS]அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை. [QE]
2. [QS]அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, [QE][QS]தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். [QE]
3. [QS]அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; [QE][QS]புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். [QE]
4. [QS]அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, [QE][QS]நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, [QE][QS]பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். [QE]
5. [QS]யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; [QE][QS]உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. [QE]
6. [QS]உமது நீதி மகத்தான மலைகள் போலவும், [QE][QS]உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; [QE][QS]யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். [QE]
7. [QS]தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! [QE][QS]அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். [QE]
8. [QS]உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; [QE][QS]உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். [QE]
9. [QS]வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; [QE][QS]உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். [QE]
10. [QS]உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், [QE][QS]செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் [QE][QS]உமது நீதியையும் பாராட்டியருளும். [QE]
11. [QS]பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், [QE][QS]துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. [QE]
12. [QS]அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; [QE][QS]எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 150
இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். 1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை. 2 அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். 3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். 4 அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். 5 யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. 6 உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். 9 வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். 10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும். 11 பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. 12 அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References