தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.} துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; [QBR] அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை. [QBR]
2. அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, [QBR] தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். [QBR]
3. அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; [QBR] புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். [QBR]
4. அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, [QBR] நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, [QBR] பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். [QBR]
5. யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; [QBR] உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. [QBR]
6. உமது நீதி மகத்தான மலைகள் போலவும், [QBR] உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; [QBR] யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். [QBR]
7. தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! [QBR] அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். [QBR]
8. உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; [QBR] உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். [QBR]
9. வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; [QBR] உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். [QBR]
10. உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், [QBR] செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் [QBR] உமது நீதியையும் பாராட்டியருளும். [QBR]
11. பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், [QBR] துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. [QBR]
12. அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; [QBR] எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 150
சங்கீதம் 36:131
1 இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை. 2 அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். 3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான். 4 அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான். 5 யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. 6 உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். 9 வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். 10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும். 11 பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக. 12 அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References