1. {தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல். } [QS]யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; [QE][QS]அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும். [QE]
2. [QS]யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; [QE][QS]ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். [QE]
3. [QS]என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; [QE][QS]நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. [QE]
4. [QS]நான் யெகோவாவை தேடினேன், [QE][QS]அவர் எனக்குச் செவிகொடுத்து, [QE][QS]என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். [QE]
5. [QS]அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; [QE][QS]அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. [QE]
6. [QS]இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, [QE][QS]அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார். [QE]
7. [QS]யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி [QE][QS]முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார். [QE]
8. [QS]யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; [QE][QS]அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான். [QE]
9. [QS]யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; [QE][QS]அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. [QE]
10. [QS]சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; [QE][QS]யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது. [QE]
11. [QS]பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; [QE][QS]யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். [QE]
12. [QS]நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, [QE][QS]நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்? [QE]
13. [QS]உன் நாவை தீங்கிற்கும், [QE][QS]உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள். [QE]
14. [QS]தீமையை விட்டு விலகி, நன்மை செய்; [QE][QS]சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள். [QE]
15. [QS]யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; [QE][QS]அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. [QE]
16. [QS]தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, [QE][QS]யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது. [QE]
17. [QS]நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, [QE][QS]அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். [QE]
18. [QS]உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, [QE][QS]நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். [QE]
19. [QS]நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், [QE][QS]யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார். [QE]
20. [QS]அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; [QE][QS]அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. [QE]
21. [QS]தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; [QE][QS]நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். [QE]
22. [QS]யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; [QE][QS]அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது. [QE]